முகவுரை
சமீப காலமாக Facebook,Whatsapp போன்ற வலைத்தளங்களில் உலாவி வரும் தகவல்களில் ஒன்று மளிகை கடைகளில் விற்கப்படும் கூட்டுப் பெருங்காயம் என்பது பெருங்காயமே அல்ல என்றும் அராபிக் கம் - 60%, மைதா - 30% பெருங்காயம் - 10% கலந்து ஏமாற்றப்படுகிறது என்பதே! அந்த தகவல் நாம் எந்தவொரு செய்தியையும் எவ்வழியாக கேள்விப்பட்டாலும் அது உண்மைதானா என்பதை ஆராய்ந்தோ (அ) சிந்தித்தோ பார்க்க வேண்டும் (அ) அது ஆதார பூர்வமான தகவல்தானா என்பதை உறுதி செய்து விட்டுதான் அதை நம்ப வேண்டும். இதுதான் நாம் சிந்திக்கும் மனிதன் என்பதற்கு சான்று இது போன்ற ஏராளமான பொய் தகவல்கள் வலைத்தளங்களில் நிறைய உலாவி வருகின்றன. அது குறித்து இக்கட்டுரையில் பின்னர் பார்ப்போம்.இப்போது பெருங்காயம் என்றால் என்ன ? அது எப்படி வருகிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம். ( Asafoetida ) Assa என்பது பாரசீக வார்த்தை Foetida என்பது இலத்தீன் வார்த்தை இதுவே மருவி பின்னாளில் Asafoetida ஆனது. இது ஒரு வகை தாவரம் ஆகும்.இது ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் போன்ற வளைகுடா பகுதிகளில் விளைகிறது. 3ல் இருந்து 4 வருடம் இது நன்கு வளர்ந்த பின் அதன் தண்டு பகுதியில் ஒரு வெட்டு வெட்டப்படும். இதிலிருந்து ஒரு வகையான பால் போன்ற திரவம் வெளி ஆகின்றது. இதை சுமார் ஒரு மாதம் வரை மண்பாணையில் சேமிப்பார்கள். இது தான் பெருங்காயத்தின் மூலப்பொருள் ஆகும். இது விளைகின்ற ஊர்களுக்கு ஏற்றவாறு மருத்துவ குணம் மாறுபடுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விதமான வாசனை வெளிப்படுகிறது. இதன் பால் மற்றும் தண்டு ஆகியன பெருங்காயத்திற்கு மூலப்பொருளாக பயன்படுகின்றன. இதன் மருத்துவ குணங்கள் என்ன என்பதை பார்ப்போம். இது அஜீரணத்தை சமாளிக்க உதவுகிறது. அஜீரண மற்றும் பிற வயிற்று பிரச்சினைகள் வயிற்றுப்போக்கு, குடல்வாயு, குடல் புழுக்கள், வாய்வு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) ஆகியவற்றைக் குறைக்கிறது.
இதை நேரடியாக உணவில் சேர்க்க முடியாது. சிறிதளவு அதிகமாக சாப்பிட்டால் கசப்பும் - காரமும் கலந்த ஒரு மனம் வெளிப்படும். வயிற்றுப்போக்கு அதிகப்படுத்திவிடும். மிகக்குறைந்த அளவே உபயோகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
மருந்தாக பயன்படுகிறது.
- ➤ மல மிளக்கியாக பயன்படுகிறது.
- ➤ செரிமானத்தை தூண்டுகிறது.
- ➤ ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- ➤ மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இவை மருந்தாக பயன்படுகிறது.
- ➤ ஒற்றைத் தலைவலி- பல்வலி - காது பிரச்சனைகள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
- ➤ கேன்சர் நோயை எதிர்க்கும் செல்கள் நிறைந்து காணப்படுகிறது.
- ➤ பாலுணர்வு உணர்ச்சிகளை தூண்டுகிறது.
- ➤ பூச்சி கடிக்கு சரும நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
- ➤ இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
- ➤ உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவுகிறது.
கூட்டுப்பெருங்காயம்?
இது எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய பொருள் என்பதால் இதன் பலன்கள் ஏராளம் நாம் உபயோகப்படுத்தும் அநேகமான பொருளில் ஏதாவதொரு ஒரு வகையில் கலந்திருக்கிறது. மாத்திரைக்கு மேலே பவுடர் போன்ற பூச்சாக இது பயன்படுகிறது.Cough Syrup, Dairy Product, Soya Been Products Soft drinks, canned foods - Essential oils துணிவகைகள், water colour paint என இதன் பலன்கள் இன்னும் ஏராளம், இதுவும் ஒரு வகையில் மருந்து பொருள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்ததாக மைதா, கோதுமை இது குறித்து விளக்கம் தர தேவையில்லை Arabic Gum - 60%, Maida - 30%, Asafoetida - 10% கடுகு எண்ணெய்,இதன் கலவைதான் கூட்டுப்பெருங்காயம் என்பது இதை ஒன்றாக கலந்து காய வைத்து அறைத்து டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகிறது. சில பேர் குறைந்த விலையில் தருவதற்காக கோதுமையோ, மைதாவையோ சற்று அதிகமாக கலந்து விற்பனை செய்வார்கள். இதுதான் பெருங்காயத்தின் உச்சபட்ச கலப்படம் ஆகும். உணவுப்பொருளோடு உணவு பொருளை கலந்து விற்பது எந்த வகையில் கலப்படமாகும். இங்கு தான் நம் தமிழ் மூதாதையர்களின் அறிவைப் பார்த்து மெய்சிலிர்க்க வேண்டியுள்ளது எங்கோ அரபு, ஆப்பிரிக்க தேசங்களில் விளையக்கூடிய ஒரு பொருளை உணவோடு சேர்த்து உண்டால் அது பல நோய்களுக்கு மருந்தாகும் என்பதை அறிந்து அற்புதமாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதையே கூட்டுப்பெருங்காயம் என நம் முன்னோர்கள் சொல்லி சென்றார்கள். இன்றும் பாரம்பரியமாக நாம் பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களில் பெருங்காயம் ஒன்று உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவன் தான் தமிழன்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." என்றார் திருவள்ளுவர்.
"உற்ற சுரத்திற்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டதே" என்றார் சித்தர்கள்.
அந்த வகையில் விடுபட்டுபோன பாரம்பரியம் மாறாத உணவு பொருளில் மிச்சமிருக்கும் உணவுகளில் ஓன்றுதான் கூட்டுப்பெருங்காயாம் இப்போது நாம் முன்னே சொன்ன தகவல்களுக்கு வருவோம். வலை தளங்களில் ஏராளமான தகவல்கள் வருகின்றன. Mazza bottle- ல் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் கலந்து விட்டது பருகாதீர்கள். ஓரு பூச்சி படத்தை போட்டு இது கடித்தால் உயிர்போகும். தண்ணீரில் இது போன்ற குட்டி பாம்புகள் வருகின்றன. அருந்தும் போது கவனம் என பயமுறுத்துவது. காஞ்சிபுரம் KSKV பள்ளி பேருந்து விபத்து 19 குழந்தைகள் பலி விபத்தில் கண் போச்சு, கால் போச்சு, வாய் போச்சி இந்த தகவலை ஷேர்செய்தால் எனக்கு 10 பைசா கிடைக்கும் என்ற தகவலை நம்பி பரப்புவது. இலங்கை தமிழருக்கு ஆதரவாக வாக்கு அளியுங்கள் - நாசா அறிவிப்பு இரவு 12 மணியிலிந்து 3 மணி வரை போனிலிருந்து கதிர்கள் வெளிப்படும். கேன்சர் நோய்க்கு மருந்து, சைனாவிலிருந்து பிளாஸ்டிக் முட்டை இது போன்ற பல பொய்யான தகவல்கள் வலைத்தளங்களில் உலாவி வருகின்றன. இது போன்ற செய்திகளை நாமும் forward செய்கிறோம். இது உண்மையா, பொய்யா என சிறிதும் யோசிப்பது கிடையாது. இதனால் யாருக்கு என்ன லாபம், யார் இந்த பொய் தகவல்களை பரப்புகிறார்கள் என்று பார்த்தால் நெட்வொர்க் காரர்கள் தான் இத்தகைய மீம்ஸ் கிரியேட்டர்களை வேலைக்கு அமர்த்தி இது போன்ற ஆதாரமற்ற தகவல்களை பரவ செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒரு செய்திக்கு 80 KB to 500 KB வரை போகும் சுமார் 10,000 பேருக்கு இந்த செய்தி போகும் போது கம்பெனிகாரர்களுக்கு லாபம் இது தெரியாமல் எந்த தகவல் வந்தாலும் அதை பரப்பி விட்டு அமர்ந்து கொள்கிறோம். இனியும் ஒரு செய்தியை பரப்பும் போது யோசித்து பரப்புங்கள்.
2. நமது தமிழரின் பாரம்பரிய வீட்டு மருந்தான கூட்டு பெருங்காயத்தை எந்த ஆதாரமும் இல்லாமல் சாப்பிட்டால் உடலு க்கு கேடு என ஏன் பொய் செய்திகளை பரப்ப வேண்டும் ?
நம் தமிழரின் உணவே மருந்துதான் இதை அறியாமல் தான் மருத்துவர்களையும் மருத்து கடைகளையும் தேடி ஓடுகிறோம். உணவுக்கு முன் தண்ணீர், உடல் வலுவிற்கு பருப்பு சாம்பார், அரோக்கியத்திற்கு காய்கறி கூட்டு, எளிதில் செரிமானமாக பெருங்காயம் கலந்த ரசம், குடல் புண் ஆகாமல் இருக்க கடைசியில் மோர், உணவிற்கு பின் 1/2 மணி நேரம் கழித்துப்பின் தண்ணீர் என உணவையே மருந்தாக உண்டவர்கள் தமிழர்கள். கம்பு, கேழ்வரகு, தினண, சாமை, சோளம், மூங்கில்அரிசி, வரகு, என பல தானியங்கள் தமிழக மக்கள் மத்தியிலிருந்து ஒழித்து விட்டு இப்போது கார்போர்ட்டை இதை தாங்கள் தான் கண்டுபிடித்தது போல ஹைபிரிட் செய்து இப்போது விற்பனை செய்திகிறது. 5 ரூபாய் ஓமத்திரவம் இப்போது 45 ரூபாய் Woodward's Gripe Water ஆக மாறி விட்டது. சாதா கல் உப்பு போய் அயோடின் உப்பு விற்பனைக்கு வந்தது. தைராய்டு நோயும் சேர்ந்தே வந்தது. இப்போது அயோடின் உப்பு வேண்டாம் சாதா கல் உப்பு பயன்படுத்து என்கிறார்கள். மரச்செக்கில் ஆட்டி எண்ணெய் தயாரித்த தமிழர்களை ஒழித்து டபுள் ரிபைனீடு ஆயில் என விளம்பர படுத்தி சம்பாதித்துவிட்டு பல நோய்களை பரப்பிவிட்டு இப்போது மரச்செக்கு எண்ணெய் தான் சிறந்தது என்கிறார்கள். குழாய் தண்ணீர் குடித்து வந்த நம்மை Aqua Guard water purifier விற்பனை செய்து இதுதான் சுத்தமான தண்ணீர் என சம்பாதித்து விட்டு இப்போது செம்பு பாத்திரத்தில் இருக்கும் சாதாரண குழாய் தண்ணீர்தான் உடலுக்கு நல்லது என்கிறார்கள். கரி உப்பு மூலம் பல் விலக்கியவர்களிடம் Tooth Paste இதுதான் பல்லுக்கு சிறந்தது சம்பாதித்து விட்டு இப்ப உங்க Tooth Paste-ல் உப்பு இருக்கா என கேட்கிறார்கள். பனங்கருப்பட்டி, வெல்லம் உபயோகித்த நம்மிடம் அதில் மண் கலந்து இருக்கிறது என கூறி வெள்ளை சர்க்கரை (ஜீனி )விற்பனை செய்து விற்று சர்க்கரை நோயை பரப்பி விட்டு இப்போது ஜீனி ஆபத்து வெல்லமே சிறந்தது என்கிறார்கள். இன்னும் இது போன்று ஏராளமாக சொல்லிக்கொண்டு போகலாம். எனினும் கட்டுரையின் நீளம் கருதி அடுத்த தகவல்களுக்கு செல்லாம். கார்பொரேட் மூலம் அழிக்கப்பட்ட நம் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் ஏராளம், ஏராளம், பாட்டி வைத்தியம் என்பது நம்மில் பலப்பேருக்கு மறந்தே போய்விட்டது . நம்முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை நிருபிக்க இன்னும் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. அதில் ஓன்று தான் கூட்டுப்பெருங்காயம் யாருக்கு தெரியும் இன்னும் சில மாதங்களில் கார்ப்பரேட்கள் ஏதாவதொரு சினிமா நடிகையை வைத்து இது தான் 100% ஒரிஜினல் பெருங்காயம் கலப்படமில்லாதாது. 100% ஒரிஜினல், தூய்மையானது என பல்லை இழித்துக்கொண்டு விளம்பரம் வரும். நாமும் பாரம்பரியத்தை விட்டு அதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். பல வருடங்கள் கழித்துப்பின் தான் தெரியும் முன்னர் இருந்ததே சரியான வழி என்று பெருங்காயத்தை நேரிடையாக உணவில் சேரக்க முடியாது என்பதால் தான் கூட்டு பெருங்காயம் ஆக மாற்றி கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் நம்முன்னோர்கள் இதனால் உடலிற்கு எந்தகேடும் இல்லை என்பதை கூடுதல் தகவலாக தெரியப்படுத்தி கொள்கிறோம்.